2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கண்டியில் பட்டிப்பொங்கல்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்த நாள்  வரும் பட்டிப்பொங்கல் கண்டி இந்து இளைஞர் மாமன்ற மண்டபத்தில் கண்டி மேலதிக அரச அதிபர் குமுது கருனாரத்ன தலைமையில் நடைபெற்றது.


கண்டி அஞ்சளி இந்துசேவா மகளிர் சங்கமும் கண்டி இந்து இளைஞர் மன்றமும் இந்து கலாசார விவகாரத் திணைக்களமும் இணைந்து இவ்விழாவை நடத்தியுள்ளன.


இங்கு உரை நிகழ்த்திய கண்டி மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி குமுது கருணாரத்ன,


ஒன்றுபட்ட இலங்கையை கட்டி எழுப்பும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு ஒவ்வொருவரும் பாடுபடும் இக்காலக்கட்டத்தில் இந்துக்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது. சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்றவர்கள் 'நாம் அனைவரும் இலங்கையர்' என்ற கோட்பாட்டை முன் உதாரணமாகக் கொண்டவர்கள். அது அவர்கள் காட்டிச் சென்ற வழியாகும். அவ்வழியில் நாமும் சென்று ஒன்றிணைந்த இலங்கையை கட்டி எழுப்பப் பாடுபடவேண்டும் என்றார்.  இங்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--