2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வெளிநாடுகளிலிருந்து அதிகளவு செலாவணியை ஈட்டித் தந்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த யுத்தவீர்ர்களுக்கு அடுத்தபடியான வீரர்களாக போற்றப்பட வேண்டியவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிந்து அதிகளவு செலாவணியை ஈட்டித் தந்த  பொருளாதார வீரர்களே என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கண்டி மலைநாட்டு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற வெளிநாடுகளில் தொழில் புரிவோர்களது பிள்ளைகள் 247 பேருக்கு புலமை பரிசில் வழங்கும் வைபவம் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த பல வருடங்களாக தொடர்ந்து எமது பொருளாதார வளர்ச்சி ஆறு சத வீதத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் வெளி நாட்டில் தொழில் புரிவோராவர்.

அண்மை காலத்தில்  அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்ட பொழுதும் இலங்கை பாரிய அளவில் பாதிக்கப்படாததற்கும் முக்கிய காரணம் வெளிநாடுகளில் தொழில் புரிவபர்களே.

இன்று பாரிய வெற்றியாக பேசப்படுவது 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சம்பவமே ஆகும். அதற்கான பொருளாதார பலத்தை எமக்கு தந்ததவர்களும் வெளிநாட்டில் தொழில் புரிபவர்களே என்பது எமக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பெருமையை தருகிரது..

இந்த அடிப்படையில் இன்று மிக போற்றப்படும்   யுத்த வீரர்களுக்கு அடுத்த படியாக போற்றப்பட வேண்டியவர்கள் வெளிநாட்டில் தொழில் புரிந்து பொருளாதார பலத்தை எமக்கு ஈட்டித் தரும் வீரர்களே' என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--