2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

மரம் வெட்டிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 25 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி தலதா மாளிகைக்கு சொந்தமான காணியிலிருந்து மரங்களை வெட்டினார் என்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியொருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் ரவீந்திர பிரேமரத்ன உத்தரவிட்டார்.

கண்டி மேலதிக நீதவான் ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த பொலிஸ் அதிகாரி ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேர பண்டாரவின் பாதுபாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதர் எம்.யூ.மினிபுர என்பவரையே இவ்வாறு விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .