2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

பத்தனையில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

Super User   / 2011 பெப்ரவரி 21 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெய்த்திலி தோட்ட பகுதியிலிருந்து இளம் யுவதி ஒருவரின் சடலமொன்றினை பத்தனை பொலிஸார் இன்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.

பத்தனை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை தொடர்ந்து பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரிக்கு அருகிலுள்ள தோட்ட பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சடலம் மீட்கப்பட்டது.

பெய்த்திலி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க மாசிலாமணி பிரின்ஸ் என்பருடையதென்று பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--