2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சிறந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நாவலப்பிட்டி பிரதேசத்திலுள்ள காவத்தை பெருந்தோட்டக் கம்பனிக்குட்பட்ட தோட்டப்பகுதிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களில் சிறந்த தொழிலாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 34 தொழிலாளர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.  

பார்கேபல், கிறேஹெட், கலமுதன, இம்புல்பிட்டிய, கட்டபுலா, குயின்ஸ்பெரி, வெஸ்டோல் ஆகிய தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த தொழிலாளர்களை  பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு  நாவலப்பிட்டி கொத்மலை கிளப் மண்டபத்தில் நடைபெற்றது.

காவத்தைப் பெருந்தோட்டக்கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஷான் ராஜதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிகாரிகள், தோட்ட முகாமையாளர்கள், உதவித்தோட்ட முகாமையாளர்கள், தொழிலாளர் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொழுந்து பறிப்பதில் சிறந்த பெண் தொழிலாளியாக பார்கேபல் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த பி.தனலெட்சுமியும் சிறந்த ஆண் தொழிலாளியாக பார்கேபல் மத்தியபிரிவைச் சேர்ந்த எஸ்.இராஜேந்திரனும் சிறந்த ஆண் கங்காணியாக  பார்கேபல் மேற்பிரிவைச் சேர்ந்த ஆர்.ராமதாஸும் சிறந்த தேயிலைத் தொழிற்சாலை ஊழியராக கிறேஹெட் மேற்பிரிவைச் சேர்ந்த ஆர்.யோகமும் சிறந்த கள உத்தியோகஸ்தராக பார்கேபல் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த எஸ்.தங்கையாவும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குப் பாராட்டுப்பத்திரங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.  நிகழ்வின் நன்றியுரையை குயின்ஸ்பெரி தோட்ட முகாமையாளர் எஸ்.ஜெய்கணேஸ் நிகழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--