2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பணமோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி அதிகாரிக்கு பொலிஸார் வலை வீச்சு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

நாவலப்பிடிய பகுதியில் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கும் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கும் தொழில்வாய்ப்பு, நிதியுதவி மற்றும் காணி பெற்றுத்தருவதாக தெரிவித்து பணமோசடி செய்த சமுர்த்தி அதிகாரியொருவர் தொடர்பாக கிடைக்கப் பெற்ற 115 முறைப்பாடுகளின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை தேடி வலை விரித்துள்ளது.

இந்நபர் தொழில் வாய்ப்புபெற்றுத் தருவதாக பணமோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் 35 முறைப்பாடுகளும் காணி மற்றும் நிதியுதவி பெற்றுத் தருவதாக பண மோசடி செய்ததாக 40 முறைப்பாடுகளும் காசோலை மோசடி தொடர்பாக 30 முறைப்பாடுகளும் ஏனைய மோசடி தொடர்பாக 10 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நபரால் அதிகளவில் போரில் உயிரிழந்த குடும்பங்களே ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--