Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ராவின்,எஸ்.சுவர்ணஸ்ரீ)
மும்பையில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரத்தினபுரி லெல்லுபிட்டிய தோட்ட போபெத்த பிரிவு தொழிலாளர்களின் வீடுகளுக்கு இனந்தெரியாதவர்கள் கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனால் அத்தோட்ட மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இலங்கை - இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நேற்றிரவு 11.30 மணியளவில் முடிவடைந்த நிலையில், சுமார் 30 பேர் தோட்ட குடியிருப்பினை சுற்றிவளைத்து சராமாரியாக கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
இதனால் ஆழ்ந்த நித்திரையிலிருந்த குழந்தைகள், வயோதிபர்கள் திடுக்கிட்டு எழுந்து அழத் தொடங்கினர். கல்வீச்சினால் சில கூரைகள் சேதமானபோதிலும், எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.டி.இராஜனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்ததையடுத்து ஹட்டன் நகரப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 11 மணியளவில் ஹட்டன் ஹிஜிராபுர பகுதியை சேர்ந்த குழுவொன்று பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
45 minute ago
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
55 minute ago
1 hours ago
3 hours ago