2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கம்பளை கல்வி வலயத்திற்குட்டபட்பட தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு கணித விஞ்ஞான போட்டிகள்

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கம்பளை கல்வி வலயத்தில் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கு  கணிதம் மற்றும் விஞ்ஞான போட்டிகளை நடாத்த வலய கல்விப் பணிமனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இப்போட்டிகள் எதிர்வரும் இரண்டாம் தவணையில் நடைபெறவுள்ளது.

இதில் ஆரம்ப பிரிவு முதல்  தரம் 11 வரையான வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பங்குபற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இப்போட்டிகள் பாடசாலை மட்டம், கோட்ட மட்டம்,  வலய மட்டம் என்ற அடிப்படையில் இடம்பெறவுள்ளன.

இதன் முதற் கட்டமாக பாடசாலை மட்டத்தில் எழுத்துப் பரீட்சை நடைபெறவுள்ளதாக கம்பளை வலய மேலதிக பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி எம். லோகநாதன் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .