2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளுடன் லொறி சாரதி, உதவியாளர் கைது

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

புசல்லாவையில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றி வந்த லொறியொன்றின் சாரதியையும் அவருக்கு உதவிய நபரொருவரையும் புசல்லாவை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

கொத்மலை, மாவெல, மாஸ்வெல பகுதி காடுகளில் இரவு வேளைகளில் சென்பக மரங்கள்,  தூனா மரங்கள் என்பன வெட்டப்படடு சட்டவிரோதமாக லொறியில் கொண்டு செல்லப்படுவதாக புகாரிடப்பட்டிருந்த நிலையிலியே மேற்படி லொறியின் சாரதியும் உதவிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த லொறியில் தூனா மற்றும் செண்பக மரக்குற்றிகள் கொண்டுச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X