2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

'கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிலாளர்களுக்கு விளக்க வேண்டும்'

Kogilavani   / 2011 ஜூன் 21 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வுத் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக் கொடுப்பனவுகள் தொடர்பில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு உரிய விளக்கங்களை வழங்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :

புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை கொடுப்பனவுகளான  தேயிலை விலைக்கேற்ற 30 ரூபா மற்றும் வருகை ஊக்குவிப்பான 105 ரூபா தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்படாத காரணத்தினால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

இந் நிபந்தனைக் கொடுப்பனவுகள் குறித்து கூட்டு ஒப்பந்தத தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைத் தெளிவுபடுத்தாமலிருப்பது இந்தக் கூட்டு ஒப்பந்தமானது முதலாளிமார் சம்மேளனத்திற்குச் சாதகமானதென்பதை வலியுறுத்துவதாக அமைகின்றது.

அதேவேளை ஒரு நாட்சம்பளத்திற்கான வேலையின் அளவை நிர்ணயிப்பதிலும் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

380 ரூபா அடிப்படைச சமபளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக் கொடுப்பனவுகள் தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பினை சுரண்டும் வகையில் அமைந்துள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .