Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 23 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
சாமிமலை ஸ்டெஸ்பி தோட்ட வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதகாலமாக நிரந்தரமாக வைத்தியர் ஒருவர் இல்லாத காரணத்தால் தோட்ட மக்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
குமரி, அவரவத்தை, சூரியகந்தை, மின்னா, தொங்க தோட்டம் ஆகிய தோட்டப் பகுதிகளைச்; சேர்ந்த மக்கள் தமது வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாது இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வைத்தியசாலைக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையில் கிளனொஜி தோட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் வந்து செல்கின்றார். ஆனாலும் இந்த மக்களின் அவசரமான வைத்தியத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே, ஸ்டெஸ்பி தோட்ட வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு பெருந்தோட்ட மனிதவள பொறுப்பு நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .