Menaka Mookandi / 2011 ஜூன் 24 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் வதிவிட பயிற்சி நெறியொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது. இப்பயிற்சி நெறி ஜூலை மாதம் இறுதியளவில் நுவரெலியாவில் நடத்தப்படும்.
புத்திரிகைத் துறையினருக்கான பத்திரிகைத் துறைசார் ஒழுக்கக்கோவை மற்றும் செய்தி வெளியீடு தொடர்பான தலைப்பின் அடிப்படையில் நடத்தப்படவுள்ள இப்பயிற்சி நெறியில் பங்குபற்ற விரும்பும் பத்திரிகையாளர்கள் பயிற்சி ஏற்பாட்டாளர், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு, இல : 96, கிருல வீதி, கொழும்பு – 05 என்ற முகவரியுடன் அல்லது 011-353635 என்ற தொலைபேசி இலக்கத்துடன் ஜூலை மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு அணைக்குழுவின் தமிழ்ப் பிரிவு முறைப்பாட்டு பொறுப்பதிகாரி எம்.எஸ்.அமீர் ஹூசைன் கேட்டுக்கொண்டுள்ளார்.
5 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
4 hours ago
4 hours ago