Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 16 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட டிக்கோயா நகரப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முதற்கட்டமாக 50 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் அழகமுத்து நந்தகமார் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
டிக்கோயா நகர வர்த்தகர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து டிக்கோயா நகரின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 35 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியில் உடனடியான வேலைத்திட்டத்திற்காக 50 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.
டிக்கோயா நகரப்பகுதி மக்களின் நன்மைக்கருதி சிறுவர் பூங்கா, மணி மண்டபம், நடைபாதை கட்டமைப்பு உட்பட பல வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
1 hours ago