Super User / 2011 ஜூலை 17 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் விளைச்சல் செய்யப்படாத அனைத்து நெல்வயல்களும் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு நெல்லுற்பத்தி மேற்கொள்ளப்படும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன கூறியுள்ளார்.
நாட்டின் இளைஞர்கள் மீண்டும் அரிசி உற்பத்திக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன் மூலம் நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்ற முடியும் எனவும் அவர் கூறினார்.
கம்பளை ரன்முல்கடுவையில் வயல்நிலமொன்றை செப்பனிடும் நிகழ்வொன்றில் பங்குபற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"எமது பொருளாதார இலக்குகளை அடைவதற்கு பொருளாதார அபிவிருத்தி முக்கியமானது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். இன்று எமது இளைஞர்கள் பலர் நெல் விளைச்சலில் ஈடுபடுவதற்கு தயங்குகின்றனர். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் அனைத்தும் கடின உழைப்பின் மூலமே அபிவிருத்தியடைந்தன என பிரதமர் டி.எம். ஜயரட்ன கூறினார். தரிசு நிலங்கள் தேசிய விரயமாகும் எனவும் அவர் தெரிவித்தார். DM. (Pix by: Prime Minister’s Media Unit)

04 Jan 2026
04 Jan 2026
riyas Monday, 18 July 2011 03:27 PM
பிரதமர் என்ற அதிகாரி அவர் இங்கு விவசாயி விவசாயி ......... விவசாயி .........
Reply : 0 0
xlntgson Monday, 18 July 2011 09:31 PM
riyas, பிரதமர் அதிகாரி அல்லர்- அதிகாரி செயலர் ஆவார்- பிரதமர் என்பது அதிகாரிகளை மட்டுமல்ல அமைச்சுகளையும் மேற்பார்க்கும் பொறுப்பாகும்! பிரதமரை அதிகாரி என்றோ அதிகாரிகளுக்கு அதிகாரி என்றோ கூற இயலாது உ-ம போலீஸ் அதிகாரிகளுக்கு பெரிய அதிகார பொறுப்பு பொலீஸ் மாஅதிபர் வசம்!
தேர்தல் அதிகாரிகளுக்கு பொறுப்பு தேர்தல் ஆணையர் இவ்வாறு ஆணையர் பொறுப்புகள் எல்லா துறைகளிலும் உண்டு. சொற்குற்றம் அல்ல பொருட்குற்றம் ஆகவே திருத்தினேன்!
விவசாயம் செய்து பெரும் பலன் இல்லையென்றால் அதை கைவிட சுதந்திரம் இல்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026