2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அரசாங்கம் நாட்டின் பொதுச்சொத்துக்களை பகற்கொள்ளையடிக்கிறது:திஸ்ஸ அத்தநாயக்க

Menaka Mookandi   / 2011 ஜூலை 18 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொட் ஆஸிக்)

அரசாங்கமானது பொதுச் சொத்துக்களை பகற்கொள்ளையர்கள் போன்று கொள்ளையடித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அக்குறணை, அலவத்துகொடை நகரில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

அரசாங்கத்தின் கொள்ளைச் சம்பவங்களுக்கு சிறந்த உதாரணமே கழிவுப் பொருட்களும் நீரும் அடங்கிய பெற்றோல் இறக்குமதியாகும். அரசாங்கமானது  நாட்டுக்கு தேவையான எரிபொருட்களை மூன்று மாதங்களுக்கு களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டும். அதற்குத்தான் அரசாங்கம் ஒன்று இருக்கின்றது. ஆனாலும் இவ்வரசு அதனை செய்யவில்லை.

திடீர் என்று பெற்றோல் முடிவடைந்ததால் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு 20,000 மெற்றிக் தொன் பெற்றோலை இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கியது.

இதன்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இயங்குகின்ற நிறுவனங்களுக்கு அறிவிக்ககூட இல்லை. இவ்வாறு எமது துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட பெற்றோலை பரிசீலித்த அதிகாரிகள் அவை தகுதியற்றவை என்று அறிவித்தனர்.

ஆனாலும் கொலொன்னாவை களஞ்சியத்திற்கு இவ்வெரிபொருளை இறக்குமாரு கட்டாப்படுத்தப்பட்டது. 2300 மில்லியன் ரூபாய்கள் பெற்றுக் கொண்டு அக்கப்பல் சென்று விட்டது. இப்பொழுது நட்டத்தை அறவிடுவது யாரிடமிருந்து என்பது கேள்விக்குறியே' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X