Kogilavani / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ராவின்)
இரத்தினபுரி காவத்தை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியும் கெப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரும் அவரது மகனும் மருமகளுமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் பயணித்த 10 வயது சிறுமி பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்தவர்களில் ஒருவரின் சடலம் காவத்தை பொது வைத்தியசாலையிலும் மற்ற இருவரின் சடலங்கள் இரத்தினபுரி பொது வைத்தியசாலையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கெப் ரக வாகனம் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
14 Jan 2026