2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

தலவாக்கலை சம்பவம் தொடர்பாக ஆராயும் கூட்டம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். எரம்ஸீன்)
தலாவாக்கலை பகுதிக்குற்பட்ட இரு பாடசாலைகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வில்  உணவு விஷமானதால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

 

இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண மற்றும் நுவரெலியா வலய கல்வி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

பொது வைபவங்களில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக அக்கறை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்  இதன்போது அதிகாரிகளை கேட்டுகொண்டார்.

இக்கூட்டத்தில் ,  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர், வலய மட்ட கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--