2025 நவம்பர் 22, சனிக்கிழமை

மத்திய மாகாண நீரேந்து பிரதேசங்களில் மரங்கள் வெட்டத் தடை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்திலுள்ள நீரேந்து பிரதேசங்களில் காணப்படும் அனைத்து வகையான மரங்களையும் வெட்டும் நடவடிக்கையை  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்வதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

நீரேந்து பிரதேசங்களில் காணப்படும் மரங்களை கண்டவாறு வெட்டுவதனால் நீரூற்றுக்கள் வற்றிச் செல்வதுடன்,  நீர்த்தேக்கங்களுக்கும் பாதிபேற்பட்டுள்ளன. இவைகளை பாதுகாப்பதற்காக மரங்களை வெட்டும் நடவடிக்கையை தடைசெய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவசர தேவைக்காக மரம் வெட்டும் தேவையேற்படின் அதற்காக அனுமதிப்பத்திரம்  வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படுமெனவும் மத்திய மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X