Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 17 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
கம்பளை, ஹபுகஸ்பிடிய பகுதியில் வீடொன்றை அமைக்க மலைச்சரிவில் அத்திவாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 42 வயது குடும்பஸ்தரொருவர் இன்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். இதில் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இன்று ஹபுகஸ்பிடிய பகுதியில் வீடொன்றுக்கு அத்திவாரம் அமைக்கும் பணியில் ஐவர் ஈடுபட்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் உயிரிழந்தவர் கம்பளை, அம்புலுவாவையை சேர்ந்த சுனில் சாந்த என்பவராவார். இவர் படுகாயம் அடைந்த நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் சடலம் தற்போது கம்பளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .