2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

லிந்துலை, மெரயா பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.கோகிலவாணி)

தலவாக்கலை- லிந்துலை, மெரயா  பிரதேசத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் இன்று வியாழக்கிழமை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாடசாலையில் பிரதான கூட்டத்தை தொடர்ந்து க.பொ.த உ/த மற்றும் க.பொ.த சா/த மாணவர்கள் இவ்வாறு வகுப்புகளுக்கு செல்லமாட்டோமென கூறி பாடசாலைக்கு வெளியில் வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.
 
க.பொ.த உயர்தர மாணவர்கள் நேற்று புதன்கிழமை பாடசாலை முடிந்து செல்லும் போது பாடசாலைக்கு அண்மையில் உள்ள நகர்புறத்தில் சிலர் பாடசாலை ஆசிரியர்களையும் மாணவர்களையும் இணைத்து தவறான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்ததால் மாணவர்கள் இவ்வாறு வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டதாக பாடசாலை ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது,

'தனிப்பட்ட விடுமுறை எடுத்துக்கொண்டு இரண்டு நாட்களாக கொழும்பில் நிற்கின்றேன். இச்சம்பவம் தொடர்பில் ஆசிரியர்கள் அறிவித்தார்கள். முழுமையான விபரம் தெரியவில்லை' என தெரிவித்தார்.

இந்நிலையில், லிந்துலை பொலிஸார் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன்,  இவ்விடயம் தொடர்பில் கோட்டக்கல்வி மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்க அறிவிக்கப்பட்டுள்ளதாக  பாடசாலை நிர்வாகம் மேலும் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .