2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 25 ஆடுகள் மீட்பு

Super User   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ, ஆர்.கமலி)

தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு சட்டவிரோதமாக ஆடுகளை கொண்டு சென்ற வேன் ஒன்றினை பத்தனை பொலிஸார் கொட்டகலை நகரில் வைத்து நேற்று புதன்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர்.

கொட்டகலை நகரில் நேற்றிரவு ரோந்து சென்ற பத்தனை பொலிஸார் சந்தேகத்துக்கு இடமான வகையில் தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன் ஒன்றை வழி மறித்து சோதனையிட்ட போது 28 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆடுகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் இல்லாத காரணத்தினால் வானின் சாரதியையும் உதவியாளரையும் கைது செய்ததுடன் ஆடுகளையும் வேனையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களையும் ஆடுகள் மற்றும் வேனையும் ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவதற்கு பத்தனை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .