2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மத்திய மாகாணசபை தலைவர் வீடு திரும்பினார்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய மாகாண சபையின் தலைவர் சாலிய திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளார்.

அவருக்கான சிகிச்சை பூர்த்தியாகாத நிலையில், பலவந்தமாக வீடு திரும்பினார் என்று கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் டபிள்யூ.ஜீ.கே.திஸாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் சகோதரரான இவர் ஹங்குராங்கெத்தயில் உள்ள அவரது வீட்டில் வைத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி...

மத்திய மாகாண சபை தலைவர் தற்கொலைக்கு முயற்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .