2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மஸ்கெலியா வாழமலை தோட்டத்தில் தீ விபத்து

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ )
 
மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழமலை தோட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் தோட்டக ;குடியிருப்பொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. வாழமலை  தோட்டத்தின் 12ஆம் இலக்க லயன் குடியிருப்பே இந்த தீ விபத்தினால் பாதிப்படைந்துள்ளது.

இந்தத் தீ விபத்தினால் குடியிருப்பினை சேர்ந்த 14 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ உயிராபத்தோ ஏற்படவில்லை.

நல்லத்தண்ணி பொலிஸாரும் தோட்ட பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ள போதும், பொரும்பாலான உடைமைகள் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தற்காலிக இருப்பிடமொன்றில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் தோட்ட நிருவாகம் ஈடுபட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில நல்லத்தண்ணி பொலிஸார்; ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .