2021 ஜனவரி 27, புதன்கிழமை

புளியாவத்தை நகர வாசியசாலைக்கு அடிப்படை வசதிகளை செய்துதருமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)


டிக்கோயா, புளியாவத்தை நகரிலுள்ள வாசியசாலையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வாசகர்கள் தெரிவித்தனர்.

அம்பகமுவ பிரதேசசபையின் நிர்வாகத்;துக்குட்பட்ட புளியாவத்தை நகரிலுள்ள இவ்வாசியசாலை மின்சார வசதியின்றியுள்ளது. மழைக்காலங்களில் இவ்வாசியசாலையில் ஒழுக்கு உள்ளது. இவ்வாறான அசெகரியங்களுக்கு மத்தியிலேயே தாங்கள் பத்திரிகைகளையும் நூல்களையும் வாசிக்க வேண்டியுள்ளதாக வாசகர்கள் கூறினர்.

எனவே, வாசகர் நன்மை கருதி புளியாவத்தை நகரிலுள்ள வாசியசாலைக்குரிய அடிப்படை வசதிகளை செய்துதருமாறு அம்பகமுவ பிரதேசசபை நிர்வாகத்தினரிடம், வாசகர்கள் கோரியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் தினேஷிடம் கேட்டபோது, இவ்வாசியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .