2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

புரொட்டொப் தோட்ட பிரதான வீதி புனரமைப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


புசல்லாவை, புரொட்டொப் தோட்ட பிரதான வீதியின் 25 கிலோமீற்றர் பகுதியை கார்பட் இடும் வேலைத்திட்டம், நுவரெலியா மாவட்ட இணைப்புக் குழு தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்வின் ஆலோசனைக்கமைவாக இந்த பாதை புனரமைப்புக்காக 60 கோடி ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இ.தொ.கா தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷா சிவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .