2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

எரிபொருள் கொள்கலன் வீதியை விட்டு விலகி விபத்து

Super User   / 2012 நவம்பர் 21 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எப்.எம். தாஹிர்)


பதுளை நோக்கி எரிபொருள் ஏற்றிக்கொண்டு சென்ற கொள்கலன் ஒன்று பதுளை - கொழும்பு பிரதான வீதியின் ஹாலிஎல, உடுவரை 7ஆம் கட்டை பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

எனினும் குறித்த வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். இந்த விபத்தினால் கொள்கலனில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் கசிவு ஏற்பட்டவுடன் பிரதேசவாசிகள் விரைந்து சேகரிக்க முற்பட்ட போது பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .