2021 மே 12, புதன்கிழமை

தண்டவாளத்தில் பயணித்த இ.போ.ச 'பஸ்'

Kanagaraj   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ரயில் தண்டவாளத்தில் பயணித்த சம்பவம் ஒன்று பண்டாரவளையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளையை நோக்கி சுமார் 40 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ்ஸே தண்டவாளத்தில் சில அடி தூரம் பயணித்துள்ளது.

குறத்த பஸ் பண்டாரவளை கொலனேதென்ன வளைவில் திரும்பியபோதே ரயில் தண்டவாளத்திற்குள் சென்றுவிட்டது.

சம்பவத்தை அடுத்து விரைந்து செயற்பட்ட ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர்  இது தொடர்பில் பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு உடனடியாக அறிவித்தார்.

இதனையடுத்து கொழும்பை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே பண்டாரவளையிலும்  மற்றும்  பொடிமெனிக்மே ஹப்புத்தளையிலும் 30 நிமிடங்கள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு  சொந்தமான அந்த பஸ் சாரதியின் சாமர்த்தியத்தினாலும் ரயில் கடவை பாதுகாப்பு ஊழியரின் துரித செயற்பாட்டின் காரணத்தினாலும் பாரிய விபத்து இடம்பெறுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .