2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கடன் அட்டையை திருடி பொருட் கொள்வனவில் ஈடுபட்டவர் கைது

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவில்மட பிரசேத வீடு ஒன்றில் புகுந்து கடன் அட்டையை திருடி அதன் மூலம் சொகுசு வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்த சந்தேக நபர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணை நடத்திய பொலிஸார், திருடப்பட்ட கடன் அட்டை மூலம் 22,202 ரூபாய்  பெறுமதியான பொருட கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் மேலுமொரு சந்தேக நபருடன் இணைந்து கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு கத்தியை காட்டி மிரட்டி 12.950 கிராம் தங்க ஆபரணங்கள் கொள்ளையடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொள்ளைகளுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X