2025 ஜூலை 03, வியாழக்கிழமை

முதலமைச்சர் வேட்பாளர் வழங்கப்பட்டால் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டி: இ.தொ.ஐ.மு

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


முதலமைச்சர் வேட்பாளர் பதவி வழங்கப்படுமானால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மத்திய மாகாணத்தில் போட்டியிடுவோம் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னனியின் செயலாளரும் முன்னால் மத்திய மாகாண சபையின் உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

இது தொடர்பான பத்திரக்கையாளர் மகாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா கூட்டுறவு விடுதியில் இடம்பெற்றது. இதில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னனியின்  செயற்குழு அங்கத்தினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட எஸ்.சதாசிவம்,

"நடைபெறவுள்ள மத்திய மாகாண சபை தேர்தல் தொடர்பாக நாம் தொடர்ந்து அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தோம். இதன் காரணமாகவே எமது நிலைப்பாடு தொடர்பாக எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்தோம்.

இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அங்கத்தினர்கள் அனைவரும் நாம் ஏன் முதலமைச்சர் பதவியை கேட்கக்கூடாது. தொடர்ந்து நாம்  ஜக்கிய தேசிய கட்சிக்கு எமது ஆதரவை அளித்து வருவதாலும் அதற்கான தகுதி தமக்கு இருப்பதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தான் 88ஆம் ஆண்டு முதல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு தனக்கு அரசியல் அனுபவமும் இருப்பதன் காரணமாகவே இந்த பதவியை தான் கோருவதாகவும் அதிகமான சிறுபான்மை மக்கள் இங்கு வாழ்கின்றனர் என்ற விடயங்களையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும்" அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .