2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஐ.ம.சு.மு ஆதரவாளர்களிடையே கைகலப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 28 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னரே மத்திய மாகாணத்தில் முதலாவது தேர்தல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் செய்திகளை சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளரும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் மாத்தளை,நாவுல நகரத்திலேயே இன்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்ற பிரமித் தென்கோன் பயணம் செய்த வாகனத்தை இடைமறித்த முன்னணியின் ஆதரவாளர்கள் அந்த வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டோர் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

  Comments - 0

  • AMBI. Monday, 29 July 2013 07:40 AM

    பம் பம் பம் ஆரம்பம்..பெம் பெம் பெம் பேரின்பம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--