2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஆற்றில் வழுக்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ராஜேஸ்வரன்

மகாவலி கங்கையின் கிளை ஆற்றில் இளைஞர் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி (தங்காப்பு) தோட்டத்தைச் சேர்ந்த ரட்ணகுமார் மோகனதாஸ் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் சிறிய அணைக்கட்டின் வழியாக கிளை ஆற்றை கடக்க முற்பட்டபோதே வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது கொட்டகலை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .