2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

'விஞ்ஞான கண்டுபிடுப்புக்கள் வளரும்போது மனித பண்பாடுகள் வீழ்ச்சியடைகின்றன'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


'தற்காலத்தில் விஞ்ஞான கண்டுபிடுப்புக்கள் வளரும்போது மனித பண்பாடுகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன' சட்டத்தரணியும் கொழும்பு பல்கலைக்கழக சுதேச வைத்திய பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எச்.எம்.மவ்ஜூத் தெரிவித்தார்.

கண்டி, மடவளை மதீனா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஒருவர் ஏதேனும் ஒரு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வது மகிழ்ச்சிகரமான விடயம். ஆனாலும் ஒரு பழைய மாணவன்தான் கல்வி கற்ற பாடசாலையில் இடம்பெறும் ஒரு வைபவத்திற்கு பிரதம அதிதியாக அழைக்கப்படுவது என்பது அதைவிடப் பண்மடங்கு மகிழ்ச்சியான விடயமாகும். அந்த அடிப்படையில் எனக்கு இது மிக மகிழ்ச்சியான விடயம்.

ஒரு பாடசாலையில் இருவகை வளர்ச்சிகளை நாம் காணமுடியும். அதில் ஒன்று பௌதீக வளர்ச்சி. இன்று பௌதீக வளங்களும் வசதிகளும் அதிகரித்த ஒரு நிலையைக் காண்கிறோம்.

அதேநேரம் மாணவர்களிடம் ஒழுக்கம் பண்பாடு விழுமியங்கள் போன்றவற்றின் வளர்ச்சியில் தேகக் நிலையைக் காண்கிறோம். விஞ்ஞானம் வளரும்போது மனித விழுமியங்களும் வளர வேண்டும்.

பாடசாலைகள் சாதாரண ஒரு மாணவனை உள்வாங்கி குறிப்பிட்ட காலத்தில் அவனை சமூகத்திற்கு மீள ஒப்படைக்கிறது.
அப்படி ஒப்படைக்கும்போது அவன் ஆளுமைப் பண்புகளைப் பெற்ற ஒருவனாக சமூகத்திற்கு வழங்கவேண்டும்.

இன்று சாதாரணமாக ஆசானை மதிக்காத ஒரு மாணவ சமுதாயத்தையே அதிகம் காண்கிறோம். இது வரலாற்று ரீதியாக எமக்கேட்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தலாகும்' என்றார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--