2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரிஃபாத்

தவுலகல பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்களை பொலிஸார் நேற்றிரவு (20) கைது செய்துள்ளனர். அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலாதெனிய பகுதியில் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரைக் கண்டு தப்பியோட முற்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் கேகாலை மற்றும் கலிகமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு சந்தேகநபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--