2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சிறுமி மீது துஷ்பிரயோகம்; இளைஞன் கைது

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரிஃபாத்

15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் ஒருவனை பொலிஸார் நேற்றிரவு (20) கைது செய்துள்ளனர். கண்டி வைத்தியசாலைக்கு செல்லும் ஒழுங்கை ஒன்றினுள் வீடொன்றிற்குள் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் குறிப்பிட்ட வீட்டை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், சந்தேகநபரான இளைஞனையும், யுவதியையும் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது தாம் நண்பர்கள் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுமி பொலிஸ் காவலுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இளைஞனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--