2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

லிந்துலை, மெராயாவில் இளைஞனின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

லிந்துலை, மெரயா தெப்பக்குளத்தில் இன்று காலை மீட்கப்பட்ட சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை மெரயா தோட்டத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞனின் சடலமென அடையாளங்காணப்பட்டுள்ளது.

இராஜகுலசேகரம் ராஜ்சன்ஜி (18) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தனது தாயிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

வெளியில் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததன் காரணமாக குழப்பமடைந்த பெற்றோர் அயல் வீட்டாரின் உதவியுடன் அவரை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பல மணிநேரம் தேடியும் கிடைக்காததன் காரணமாக பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸார் இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சிறுவன் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மெராயா தமிழ் வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி தெப்பக்குளமானது இதுவரை 10 இற்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    இதேவேளை, காணாமல் போனதாக கூறப்படும் இந்த இளைஞன் கொழும்பிற்கு வேலைக்கு வந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .