2021 மார்ச் 04, வியாழக்கிழமை

குளவி கொட்டியதில் கோவேறு கழுதை பலி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

டிக்கோயா, சாஞ்சிமலை தோட்ட முகாமையாளரின் பங்களாவில் வளர்க்கப்பட்ட கோவேறு கழுதை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பலியாகியுள்ளதாக அந்த தோட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட முகாமையாளரின் சாரதி, சமையற்காரர் மற்றும் காவலாளி உட்பட நான்கு பேரே குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய கோவேறு கழுதை பங்களாவை விட்டு வெளியில் ஓடியுள்ளது. அந்த கழுதை நேற்றுவரை பங்களாவுக்கு திரும்பவில்லை.

இந்நிலையிலேயே அந்த கோவேறு கழுதை இறந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்றும் முகாமையாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .