2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஆரோக்கியமான குழந்தையை தேர்ந்தெடுக்கும் போட்டி

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் ஆரோக்கியமான குழந்தையை தேர்ந்தெடுக்கும் போட்டி செவ்வாய்க்கிழமை (8) நுவரெலியா சினிசிட்டா உள்ளக அரங்கில் நடைபெற்றது.

ஹேமாஸ் நிறுவனத்தின் அனுசணையில் நடைபெற்ற இப்போட்டியில், முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட குழந்தைக்கு ஒரு பவுன் தங்கச் சங்கிலியும், இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட குழந்தைக்கு அறை பவுன் தங்கச் சங்கிலியும் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட குழந்தைக்கு கால் பவுன் தங்க சங்கிலியும், ஆறுதல் பரிசு 10 குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டன.

குழந்தைகளுக்கான பரிசில்களை  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே, மாநகர சபை உறுப்பினர்களான எம்.சந்திரன், மொகமட் பலீல் ஆகியோர் வழங்கி வைத்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .