2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பதுளை சிறைச்சாலையில் புத்தாண்டு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}-எம்.எப்.எம். தாஹிர்


பதுளை சிறைச்சாலை நலன்புரி சங்கம், பதுளை சிறைச்சாலையில் சித்திரை புத்தாண்டு விழாவினை இன்று கொண்டாடியது.

பதுளை சிறைச்சாலை அதிகாரி டி.எம்.எஸ்.ஜி. தசநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நலன்புரி சங்க தலைவர் ஏ.எச்.எம். ஜாபீர், பிரதான ஜெயிலர் எஸ்.ஆர். கலப்பத்தி உட்பட பலர்; பிரதான அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் தலையணை சமர் உள்ளிட்ட பல விநோத விளையாட்டுகள் கைதிகளிடையே நடாத்தப்பட்டதுடன்  பரிசுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--