2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பண்டாரவளை விபத்தில் நால்வர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை மத்திய கல்லூரிக்கு அருகாமையில் பாதசாரிக்கடவையை கடக்க முயன்ற மாணவர்களில் மூவரையும் பெண்ணொருவரையும் பஸ் ஒன்று மோதியதில் அந்த நால்வரும் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களில் இருவர்  பண்டாரவளை வைத்தியசாலையிலும் மற்றொரு மாணவனும் பெண்ணும் தியத்தலாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவர்கள் மூவரும் ஆறு மற்றும் ஏழு வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றிற்கும் பாடசாலை பஸ் ஒன்றிற்கும் இடையில் சிக்கியே குறித்த மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து பஸ் சாரதியை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .