2025 ஜூலை 02, புதன்கிழமை

மல்வத்த பீடாதிபதி - பொதுபலசேனா சந்திப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பொதுபல சேனா , ராவனா பலய , ஜாதிக்க சங்க சம்மேளனம் ஆகியவற்றின் உறுப்பினர்கள்  மல்வத்த பீடாதிபதி வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை புதன்கிழமை (23) சந்தித்தனர்.

மல்வத்தை பீடாதிபதியை சந்தித்த பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர், ராவனாபலயவின் செயலாளர் இத்தேபானே சத்தாதிஸ்ஸ ஜாதிக சங்க சபையின் ரஜவத்தே வப்ப ஆகிய தேரர்கள், பௌத்த சமயத்திற்கு பிற சமயங்களால் ஏற்பட்டுவரும் அச்சுறுத்தல், கசினோ சூதாட்டம், பாலியற் தொழில், உட்பட சகல விதமான அனாச்சாரங்களுக்கும் அரசு முடிவு கட்டாவிட்டால் பௌத்த மதத்தை பாதுகாக்க தேரர்கள் பாதையில் இறங்கிப் போராட வேண்டி வரும் என்று கூறினர்.

இதற்குப் பதில் அளித்த மல்வத்தை மகா நாயகத் தேரர்  சக்தி மிக்க சங்க அமைப்பால் ஒரு அரசை உருவாக்கவும் முடியும். அதே போல் ஒரு அரசை கவிழ்க்கவும் முடியும். எனவே அது எங்கள் கையில் உள்ளது என்றும் அதனை மிக பக்குவமாக பாவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .