2025 ஜூலை 02, புதன்கிழமை

'கிராம அபிவிருத்தி சங்கங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்'

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


தோட்டப்பகுதிகளில் இயங்கும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஊடாக சமூக நலன்புரி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமென்பதால் தோட்டப்பகுதிகளில் கிராம அபிவிருத்தி சங்கங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்;ந்தும் தெரிவித்த அவர்,

'அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பெரும்பாலும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியில் 5 வீதம் இந்தச்சங்கங்களுக்குக் கிடைக்கின்றது. இந்த நிதியைக் கொண்டு சமூக நலன்புரி திட்டங்களை மேற்கொள்ள முடியும். அந்த அடிப்படையில் கொட்டகலை டெரிக்கிளயர் கிராம அபிவிருத்தி சங்கம் நுவரெலியா பிரதேச செயலகத்தில் சிறப்பாக செயற்படுகின்ற சங்கமாக திகழுகின்றது.

இந்தச்சங்கத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி, விசேட நிதி  என்பனவற்றினை இந்தச்சங்கத்தின் ஊடாக ஒதுக்கியுள்ளோம்.

இவ்வாறு சிறப்பாக ஏனைய சங்கங்களும் செயற்பட வேண்டும். எமது தோட்டப்பகுதிகளில் வாழுகின்ற முதியவர்கள் தமது குடும்பத்துக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்து களைத்துப் போனவர்கள்.

பல்வேறு அனுபவங்களை தன்னகத்தே கொண்டவர்கள். இவ்வாறானவர்களைக் கௌரவிப்பதும் அவர்களுக்கு உதவுவதும் எமது கடமையாகும்' என தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .