Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஜனவரி 31 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ, டி.ஷங்கீதன்
தலவாக்கலை பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பி, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போனவரை தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் இருவரையும் உடனடியாக கைதுசெய்யுமாறு பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சிவில் உடையில் சென்ற பொலிஸாரே குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுதொடர்பில் பொலிஸார் உறுதிப்படுத்தவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரத்தில் பாபுள் வெற்றிலையை கையில் வைத்திருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கண்ட தலவாக்கலை பொலிஸார், அவரை விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துசென்றுள்ளனர்.
மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் பாலத்தின் ஊடாக அவரை பொலிஸார் அழைத்து சென்றபோது பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்த அந்த நபர், நீர்தேக்கத்தின் பாலத்திலிருந்து சுமார் 40 அடி ஆழத்தில் நீருக்குள் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு பாய்ந்து காணாமல் போனவர் இளைஞன் எனவும் இவர் சம்பந்தமாக எந்த விவரமும் தெரியாதெனவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அந்த நபரை கைதுசெய்த பொலிஸார் இருவரையும் உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி பிரதேச மக்கள் பொலிஸ் நிலையத்து முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
56 minute ago