Gavitha / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (04) திறந்துவிடப்பட்டுள்ளதென, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
பொலன்னறுவை, கிரிதலே நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும் மின்னனேரிய நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் ஒரு அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் அனர்த்த முகாரமத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago