2021 மே 12, புதன்கிழமை

புதிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கேகாலை ரங்வல மஹாநாக மகா வித்தியாலயத்தில் 400 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மாடி கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (09) இடம்பெற்றது.


இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


மேலும், பாடசாலை அதிபரிடம் பாடசாலை உபகரணங்களையும் கையளித்தார்.


இந்நிகழ்வில், மாகாண கல்வி அமைச்சின் உதவி செயலாளர் ரூவான், கல்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .