2021 மே 12, புதன்கிழமை

வீடொன்றிலிருந்து அநாதரவான நிலையில் சிறுவன் மீட்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ


பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெட்சுமி தோட்டம் மேல் பிரிவில் வீடொன்றிலிருந்து அனாதரவான நிலையில் மாரிமுத்து கண்ணதாசன் என்ற 10 வயது சிறுவன் ஒருவனை பொகவந்தலாவை பொலிஸார் இன்று புதன்கிழமை (11) மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.


குறித்த சிறுவன் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்ததாகவும், சிறுவனின் தந்தை கொழும்பில் பணிபுரிவதாகவும் 4 அல்லது 5 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே தன்னை பார்க்க வருவதாகவும் குறித்த சிறுவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளான்.


மேலும் தனது கல்வியை மேற்கொள்வதுக்கு கற்றல் உபரணங்கள் இல்லாத காரணத்தினால் பாடசாலை செல்லவில்லை என குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.


குறித்த சிறுவனை நாளை (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .