Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
கடும்மழைக் காரணமாக பொகவந்தலாவை, டின்சின் தோட்டத்தில் 12 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இப்பகுதியில் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கடும்மழைக் காரணமாக டின்சின் பகுதியிலுள்ள ஒரு மைதானமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மரக்கறி தோட்டமும் முழுமையாக வெள்ளத்தில்; மூழ்கியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டியாகலை தோட்டப் பிரிவில் ஆற்றுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் ஒரு அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு, அம்பகமுவ பிரதேச சபையும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .