2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

நாலந்த எல்லாவலவின் 18ஆவது சிரார்த்த தினம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ


இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள்; நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நாலந்த எல்லாவலவின் 18ஆவது சிரார்த்த தின நிகழ்வு புதன்கிழமை (11) குருவிட்டவில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலை வளாகத்தில் நடைபெற்றது.


நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல, குருவிட்ட பிரதேசத்தில் வைத்து 1997ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


இந்நிகழ்வில் அமரர் நாலந்த எல்லாவலவின் தயாரும் மத்திய மாகாண ஆளுநருமான சுரங்கணி எல்லாவல, சப்ரகமுவ மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, டளஸ் அழகப்பெரும, சி.பி.ரத்நாயக்க, திஸ்ஸ கரலியந்த, ஜகத் புஸ்பகுமார, மஹிந்த அமரவீர, ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ண பரனவிதான, மாகாண அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, மாகாண சபை உறுப்பினர் அகில எல்லாவல, மற்றும் சாந்தினி எல்லாவல, விஸாகா எல்லாவல உட்பட் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .