2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Gavitha   / 2015 ஜூலை 29 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சேனாதிராஜா

பன்வில அரச பெருந்N;தாட்டத்துக்கு சொந்தமான கலாபொக்க, அலகொல, ஆகல,  கந்தகெட்டிய, சோலங்கந்த ஆகிய தோட்ட பகுதிகளில் கடமையாற்றி வரும் தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கவேண்டிய சேவைக்கால பணங்களான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்ற நிதியங்களுக்குள் தாங்கள் உள்வாங்கப்படவில்லை என்று கோரியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 7,000 தோட்ட உத்தியோகஸ்தர்கள் பணியாற்றும் குறித்த தோட்ட பகுதியில் இந்த பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக தோட்ட வேலைகள் அனைத்தும் தடைப்பட்டு உள்ளதாகவும் இவர்களின் பணிகளை தோட்ட கங்காணியும் துரைமாரும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றமையால், அரச உத்தியோகஸ்தர்கள் இந்த காலகட்டத்தில் எந்தவொரு பிரச்சினைகளையும் ஏற்படுத்திக்கொள்ள கூடாது என்று ஏற்கெனவே தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .