Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 30 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
'ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பு அரசு, பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளுக்காக முன்னெடுத்த வேலைத்திட்டங்களால்; அம்மக்கள் பல நன்மைகளை பெற்றுவருகின்றனர். எனவே, நடைபெறப்போகும் தேர்தலில் செஞ்சோற்றுக்கடனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பெருந்தோட்ட மக்கள் அனைவரும் ஐ.ம.சு.கூ.வின் வெற்றிலைச் சின்னத்துக்கும் எனது 11ஆம் இலக்கத்துக்கும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்' என கூட்டமைப்பின் பதுளை மாவட்ட வேட்பாளர் எஸ்.தயாபாரன் தெரிவித்தார்.
பதுளையில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில்;; கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகள், தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தவிர்த்து ஏனைய தேசியக் கட்சிகள் இரண்டுமே தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாடுகள் குறித்து எத்தகைய கொள்கைப் பிரகடனங்களையும் வெளியிடவில்லை' என்றார்.
ஆனால், தோட்டத் தொழிலாளர்களின் அதி முக்கிய வாழ்வாதார பிரச்சினையான சம்பள உயர்வு விடயமாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப்பற்றி குறிப்பிடவில்லை. பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் யாவும், ஐ.ம.சு.கூ.வின் ஆட்சிக்காலத்திலே முன்னெடுக்கப்பட்டன. ஆனால், புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பெருந்தோட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்' என்றும் அவர் கூறினார்.
'1983ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் ஏற்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கலவரம், எந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அத்தகையதோர் ஆட்சி மீண்டும் வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்' என அவர் மேலும் கூறினார்.
7 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago