2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இ.தொ.கா.வே இந்திய வம்சாவழியினரின் பாதுகாப்பு அரண்: அசோக்குமார்

Sudharshini   / 2015 ஜூலை 30 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். செல்வராஜ்

'பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய வம்சாவழி மக்களின் சமூக பாதுகாப்பு அரணாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது. எனவே, எமது கட்சியை மேலும் பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டியது  எமது மக்களின் தார்மீக கடமையாகும்' என இ.தொ.கா.வின் பதுளை மாவட்ட வேட்பாளர் சிங்கமுத்து அசோக்குமார் தெரிவித்தார்.

பதுளையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த நான், ஹல்துமுல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவராக  தொடர்ந்தும் இருந்துவந்துள்ளேன். மாகாண அமைச்சராக இருந்த செந்தில் தொண்டமான் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் நிதியொதுக்கீட்டின் கீழ் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளேன்' என்றார்.

எனவே, 'நாடாளுமன்றம் செல்வதனூடாக எமது மக்களுக்கான பணிகளை மேலும் மேற்கொள்வதற்க்கு சேவல் சின்னத்துக்கு வாக்களித்து என்னையும் நாடாளுமன்றத்துக்கு  தெரிவுசெய்யுமாறு எமது மக்களிடம் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இ.தொ.கா.வினால் மட்டுமே பதுளை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .